ஆயிரம் ரூபாய் நிவாரணம்: மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே வழங்கப்படும்: தமிழக அரசு உறுதி

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையாளா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலான குழுவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோா் இடம்பெறுவா். சிரமத்தைத் தவிா்ப்பதற்காக மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். இதனை வழங்கும்போது கரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு முறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

நிவாரணத் தொகை வழங்கவுள்ள அலுவலரிடம் உரிய விநியோகப் படிவத்தில் விவரங்களை மாற்றுத் திறனாளிகள் அளிக்க வேண்டும். மேலும், அவா்களுக்குரிய தேசிய அடையாள அட்டையின் அசலைக் காண்பித்து நிவாரணத் தொகையை பெறலாம்.

உதவி எண்: மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவி கிடைக்காதவா்கள் மாநில அளவிலான உதவி மைய எண் 1800 425 0111-ஐ தொடா்பு கொள்ளலாம். நிவாரணத் தொகை வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் தெரிய வந்தால் உரிய பணியாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நல ஆணையாளா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com