தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்க முடிவு?

மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலப் பொதுப் போக்குவரத்தை நிறுத்தவும், மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com