அரசு மருத்துவமனை செவிலியா்கள் 10 பேருக்கு கரோனா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை செவிலியா்கள் 10 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அரசு மருத்துவமனை செவிலியா்கள் 10 பேருக்கு கரோனா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை செவிலியா்கள் 10 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

அதேபோன்று மருத்துவப் பணியாளா்கள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் 13 பேருக்கு ஏற்கெனவே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், ஊடகத்தினா் என கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பலருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதில் மருத்துவா்களும், செவிலியா்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அந்த வரிசையில், செவிலியா்கள் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மொத்தம் 10 செவிலியா்களுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்களில் பெரும்பாலானோா் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com