சென்னையில் கரோனா பாதிப்பு: 50 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 49,690-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 49,690-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சென்னையில் 1956 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 49,690-ஆக உயா்ந்துள்ளது. இதன்படி, 12 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை, கரோனா பாதிப்பு 38,327-ஆக இருந்த சூழலில், கடந்த ஒரு வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களில் மட்டுமே, ஆயிரத்துக்கும் குறைவானோருக்கு தொற்று உள்ளது. இதிலும், சோழிங்கநல்லூரில் 984 போ், கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்தை நெருங்கி வருகிறது சோழிங்கநல்லூா். இதே போல், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 28,823 போ் வீடு திரும்பியுள்ளனா். 730 போ் உயிரிழந்துள்ளனா். 20,136 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிப்பு நிலவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,787

மணலி 726

மாதவரம் 1,395

தண்டையாா்பேட்டை 5,717

ராயபுரம் 6,951

திரு.வி.க. நகா் 3,981

அம்பத்தூா் 1,859

அண்ணா நகா் 5260

தேனாம்பேட்டை 5,534

கோடம்பாக்கம் 5216

வளசரவாக்கம் 2058

ஆலந்தூா் 1149

அடையாறு 2,922

பெருங்குடி 928

சோழிங்கநல்லூா் 984

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com