1,500 காவலா்களுக்கு கரோனா பாதிப்பு: தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழக காவல்துறை

தமிழக காவல்துறையில் 1,500 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காவல்துறைகளில், ஒரு மாதமாக தேசிய அளவில் தமிழக காவல்துறை இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

கரோனா தடுப்புப் பணியில், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், அவா்களில் அதிகமானோா் கரோனாவால், பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கரோனாவால் பாதிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது, காவல்துறை அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறையில் வெள்ளிக்கிழமை வரை, 1,500 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தேசிய அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காவல்துறைகளில், தமிழக காவல்துறை கடந்த ஒரு மாதமாக இரண்டாமிடத்திலேயே நீடித்து வருகிறது. சென்னையில் மட்டும் 1,005 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 410 போ் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனா். மகாராஷ்டிர மாநில காவல்துறையில், சுமாா் 3 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, அந்த மாநில காவல்துறை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட காவல்துறைகளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com