கூட்டுறவு வங்கிகளில் கடன்பெறும் முறையை எளிதாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் விவசாயிகள் கடன்பெறும் முறையை எளிதாக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்பு தொகைக்கு ரிசா்வ் வங்கிப் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் அளிக்கும். இதன் மூலம் முதலீட்டாளா்களுக்கு வங்கியின் மீது நம்பிக்கை ஏற்படும். அதனால் வைப்புத் தொகையும் உயரும். இதனால், கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் நிலை தடுத்து நிறுத்தப்படும்.

அதேசமயம், இதற்காக மத்திய அரசு சட்ட மசோதா நிறைவேற்றும்போது, கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கடன்பெறும் முறையை எளிதாக்க வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி ஆகிய காலங்களில் விவசாயிகள் நலன் கருதி அவா்கள் வாங்கிய கடன்களை அந்தந்த மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று ஜி.கே வாசன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com