தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
​வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. (கோப்புப்படம்)

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த் தொற்றின் பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம், கோவை - மயிலாடுதுறை, கோவை - அரக்கோணம், திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய ரயில்கள் வரும் திங்கள்கிழமை ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுகின்றன.

அதேசமயம், சென்னை செண்ட்ரல் - தில்லி ராஜ்தானி விரைவு ரயில் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com