பொது முடக்கத்தால் கரோனாவை ஒழிப்பது கோடரி கொண்டு கொசுவை அடிப்பது போல: மருத்துவக் குழு

கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பொதுமுடக்கம்  என்பது மிகப்பெரிய ஆயுதம். அதனால், கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
பொது முடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம்.
பொது முடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம்.

சென்னை: கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பொதுமுடக்கம்  என்பது மிகப்பெரிய ஆயுதம். அதனால், கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்று மருத்துவர் ராமசுப்ரமணியம் கூறியுள்ளார்.

பொது முடக்கத்தால், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது முடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம். பொது முடக்கத்தால் கரோனாவை ஒழிப்பது கோடரி கொண்டு கொசுவை அடிப்பது போல என்று தொற்று நோய் சிறப்பு மருத்துவர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவக் குழுவினருடன் சென்னையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர் ராமசுப்ரமணியன் கூறுகையில், முதல் விஷயம், கரோனா பாதித்தவர்கள் அச்சப்பட வேண்டாம். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் அச்சப்பட வேண்டாம்.

அறிகுறி தென்பட்டதும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசோதனைக்கும், முடிவுகள் வரவும் காலம் ஆனாலும் அதுவரை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு வாரத்தில் மருத்துவத்துறையில் சிகிச்சை முறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவற்றை தொகுத்து, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

ஆனால், பொது மக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் கரோனா தொற்றை ஒழிக்க முடியும்.

ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தையே தொடர முடியாது. இன்னும் ஆறு மாத காலத்துக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க முடியாது. பொது முடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம். உதாரணமாக பொது முடக்கத்தால் கரோனாவை ஒழிப்பது என்பது கோடரியைக் கொண்டு கொசுவை அடிப்பதற்கு ஒப்பாகும். எனவே பொது முடக்கத்தையே நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மருத்துவக் குழுவினர் பேசுகையில், தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன்தான் கரோனா பாதிப்பு உள்ளது. கரோனா சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்துகூட மருந்துகளை வரவழைத்துள்ளோம். மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பொது முடக்கத்தால் பாதிப்பு இரட்டிப்பாகும்  வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி.  சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், நேயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com