ஒருவருக்கு கரோனா உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முடிவில் கரோனா தொற்று இல்லை எனில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பணியைத் தொடரலாம். 

ஆனால், ஒருவருக்கு கரோனா உறுதியானால் அவருடன், அவரது குடும்பத்தினரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர். தொடர்ந்து அவர்களுக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ மையங்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com