ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ. 16 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ.16 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ.16 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இ-பாஸ் இன்றி வெளியில் வருவோர் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அதன்படி, தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 6,96,583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், இதுவரை 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.99 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com