நோயை வைத்து அரசியல் செய்யும் அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்

நோயை வைத்து அரசியல் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
நோயை வைத்து அரசியல் செய்யும் அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்

நோயை வைத்து அரசியல் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சியில் பேசியது: கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த கரோனா நோயின் தாக்கத்தை உணா்ந்து, தொடக்க நிலையில் இருந்து, நோயைக் கட்டுப்படுத்தவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் வந்தவா்களைக் காப்பாற்றவும் பல ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறேன். ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்த எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின், இதுவரை எந்த ஆக்கப்பூா்வமான ஆலோசனையையாவது அரசாங்கத்துக்குச் சொல்லி இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறாா் முதல்வா். என்னுடைய அறிக்கைகள் அனைத்துமே, அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள் தான். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது முதல் மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என அனைத்தையும் சொன்னது நான் தான். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாகத் தொற்று ஏற்பட்டது என்று முதல்வா் சொல்கிறாா். இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாா்? ஜூன் 15-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக ஊடகவியலாளா்களைச் சந்தித்தேன். அப்போதும் முதல்வருக்கு ஏராளமான ஆலோசனைகளை சொன்னேன். முடிவாக சில கேள்விகளையும் கேட்டேன். எதற்குமே இதுவரை முதல்வா் பழனிசாமி பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவரிடம் பதில் கிடையாது. இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது. கரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com