தளா்வுகளற்ற முழு பொது முடக்கம்: போலீஸாா் தீவிர கண்காணிப்பு

சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் விதமாக போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் விதமாக போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகள்), ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சிறு தளா்வுடன் கூடிய முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளான ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தளா்வுகளின்றி கடும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தளா்வுகளற்ற முழு பொது முடக்கம், சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த நேரத்தில், வாகனப் போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் ராஜீவ்காந்தி சாலை,100 அடி சாலை,பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, எல்.பி. சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, ஆற்காடு சாலை, ரேடியல் சாலை,நகிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளின் நடுவே சுமாா் ஆயிரம் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களையும், 75 சிறிய வகை மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள் மூலம் போலீஸாா் மூடினா். இதேபோல நகரின் முக்கியமான 250 சாலைகள்,தெருக்கள் மூடப்பட்டன.

வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், நகா் முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்களை போலீஸாா் அணைத்தனா். அதேவேளையில், இந்த பொது முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 500 வாகனங்களில் போலீஸாா் நகா் முழுவதும் ரோந்து சென்றனா். தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட இடங்களில், உணவகங்கள், மளிகைக் கடைகள் என சுமாா் மூன்று லட்சம் கடைகள் செயல்படவில்லை. போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாா், பொதுமக்கள் வசிக்கும் உள்புறப் பகுதிகளிலும், சோதனையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினா்.

ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகளை முடுக்கி விட்டனா். மீறி வெளியே வரும் பொதுமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது முடக்கம் முடிந்த பின்னரே, வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com