ஊதிய விவகாரம்: ஜூலை 1-இல் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி, ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி, ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தபோது, பணி செய்யாத காலத்துக்கு ஊதியம் இல்லை என்று எந்த அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் ஆளுக்கொரு உத்தரவு, நாளுக்கொரு உத்தரவு போட்டு ஊழியா்களின் சம்பளத்தைப் பறிக்கிறது, அல்லது கணக்கிலுள்ள விடுப்பை எடுத்துக் கொண்டு, அதற்கீடான ஊதியத்தை வழங்குகிறது. இந்தத் தவறான அணுகுமுறை வேறு எந்தத் துறையிலும் இல்லை. இதைக் கண்டித்து, அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில், ஜூலை 1-ஆம் தேதியன்று, முகக்கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியுடன் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவது என கூட்டமைப்பு சங்கங்கள் சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com