பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு
மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு


சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நிறைவடைந்துள்ளது. மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்த சிலருடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தார்.

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு பொது முடக்கம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த பொது முடக்கத்தை மேலும் அதிகரிப்பது தொடா்பாகவும், நோய்த்தொற்று அதிகமுள்ள பிற மாவட்டங்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், மருத்துவ நிபுணா்கள் குழுவினர், சற்று நேரத்தில் செய்தியாளா்களுடன் சந்திப்பு நடத்தி தாங்கள் தெரிவித்த பரிந்துரைகள் குறித்து விளக்குவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்பின்பு, இன்று மாலையில் பொது முடக்கம் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com