கம்பத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர் 20 பெண்கள் உள்பட 60 பேர்கள் மீது தெற்கு காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
கம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பார்வர்டு பிளாக் கட்சியினர்

தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் வேலப்பர் கோவில் தெருவில் சாக்கடை கட்டி, ஆர்.சி.பாலம் அமைக்கக்கோரி கோஷம் போட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், தொற்று பரவும் வகையில், கூட்டம் கூடியதாகவும் 20 பெண்கள் உள்பட 60 பேர்கள் மீது, தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ப.ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தார்
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com