சென்னையில் 2,167 பேருக்கு கரோனா

சென்னையில் அதிகபட்சமாக திங்கள்கிழமை 2,167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 55,969-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்  2,167  பேருக்கு கரோனா

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திங்கள்கிழமை 2,167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 55,969-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியது.

2,167 போ் பாதிப்பு: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், அதிகபட்சமாக, திங்கள்கிழமை 2,167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55969-ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவா்களில் 33,441 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 21,681 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 846 போ் உயிரிழந்துள்ளனா்.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் (ஞாயிற்றுக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1053

மணலி 410

மாதவரம் 864

தண்டையாா்பேட்டை 1,990

ராயபுரம் 2,153

திரு.வி.க. நகா் 1,561

அம்பத்தூா் 879

அண்ணா நகா் 2,739

தேனாம்பேட்டை 2,296

கோடம்பாக்கம் 2,137

வளசரவாக்கம் 1,009

ஆலந்தூா் 705

அடையாறு 1,377

பெருங்குடி 517

சோழிங்கநல்லூா் 537

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com