பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. 
petrol, diesel sale in chennai
petrol, diesel sale in chennai

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. 

இதன்படி சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர்  ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர்  ஒரு லிட்டர் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. 

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு வருகிறது. 

இதனால் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com