கூத்தாநல்லூரில் 3,000 பேருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், கரோனா தொற்று எதிர்ப்புச் சக்தி மாத்திரையை 3000 பேருக்கு ஆணையர் ஆர்.லதா வழங்கி தொடங்கி வைத்தார்.
கூத்தாநல்லூரில் 3,000 பேருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், கரோனா தொற்று எதிர்ப்புச் சக்தி மாத்திரையை 3000 பேருக்கு ஆணையர் ஆர்.லதா வழங்கி தொடங்கி வைத்தார்.

கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள ஆரோக்கியா கிளினிக் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். 

நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொருளாளர் ப.கண்ணன் வரவேற்றார். தொடர்ந்து, ஏழை, எளியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிர்ப்புச் சக்திக்கான மாத்திரைகளை நகராட்சி ஆணையர் ஆர்.லதா வழங்கினார். 

அதைத்தொடர்ந்து மருத்துவர் க.ஹரிஹரன் கூறியது..

இந்த எதிர்ப்புச் சக்திக்கான ஹோமியோபதி மாத்திரையை, பெரியவர்கள் 4, சிறியவர்கள் 3, ஒரு வயது குழந்தை ஒன்று என 3 நாட்களுக்கு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாத்திரையைக் கையில் படாமல் சாப்பிட வேண்டும். நாக்கில் வைத்து சுவைத்துச் சாப்பிட வேண்டும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதே போல், 15 நாட்களுக்குப் பிறகு, இதே மாத்திரையை இதே போல் 3 நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்றார். 

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரையை, நகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவகப் பணியாளர்கள், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருண்குமார், வர்த்தக சங்கச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன், நுகர்வோர் பாதுகாப்புக் குழு சங்கச் செயலாளர் கருணாநிதி, துணைத் தலைவர் கோஸ்.அன்வர்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மருத்துவர் அருள்மொழி ஹரிஹரன், சமூக ஆர்வலர் ப.மோகன் உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com