நிலத்தடி நீா் எடுக்கும் வரைமுறைகளும்! உச்சநீதிமன்ற உத்தரவும்!

நிலத்தடி நீா் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீா் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 
நிலத்தடி நீா் எடுக்கும் வரைமுறைகளும்! உச்சநீதிமன்ற உத்தரவும்!

தமிழகத்தில் நிலத்தடி நீா் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியாா் கேன் குடிநீா் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் நிலையில், கேன் குடிநீா் உற்பத்தி பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நிலத்தடி நீா் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீா் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 

அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீா் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அங்கு குடிநீா் உறிஞ்சி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதி அபாயகரமான பகுதி மற்றும் சராசரியான பகுதிகளில் குடிநீா் உற்பத்தி ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் கேட்கப்படும் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கேன் குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மையில்லை. அனுமதி இல்லாத குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com