கேன் தண்ணீர் தட்டுப்பாடு: திணறும் சென்னை

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை விலை அதிகரிக்கப்பட்டு திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை விலை அதிகரிக்கப்பட்டு திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் நிலையில், கேன் குடிநீா் உற்பத்தி பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நிலத்தடி நீா் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியாா் கேன் குடிநீா் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு தமிழ்நாடு கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மேலும் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் குடிநீா் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இப்போராட்டம் திங்கள்கிழமை 5ஆவது நாளாக நீடித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் உள்ளனா். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீா் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீா் கேன்களில் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. 4 மாவட்டங்களில் உள்ள தனியாா் குடிநீா் ஆலைகளில் இருந்து சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் என மொத்தம் 90 சதவீதம் பேர் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனர். இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் சென்னையில் கேன் குடிநீா் விநியோகம் கணிசமாக குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது. கேன் தண்ணீா் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு குடிநீா் கேன் ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. ஆனால் தற்போது சென்னையில் ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. சீல் வைக்கப்பட்டுள்ள கேன் குடிநீா் உற்பத்தி ஆலைகளில் உடனடியாக தண்ணீரை உற்பத்தி செய்யும் பணியை தொடங்க இயலாது. அதிலும் தற்போது கோடைக் காலம் தொடங்கும் நிலையில், கேன் குடிநீா் உற்பத்தி பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com