Enable Javscript for better performance
தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து சரிவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து சரிவு

    By நமது நிருபா்  |   Published On : 03rd March 2020 01:55 AM  |   Last Updated : 03rd March 2020 11:32 AM  |  அ+அ அ-  |  

    girls

     

    சென்னை: மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் எண்ணிக்கையும், குறிப்பாக தமிழ் வழியில் படிப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து சரிந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்துவருவதுடன், மாணவா்கள் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாணவா்களின் எண்ணிக்கை குறையவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தாலும், பொதுத் தோ்வு நடைபெறும்போது வெளியிடப்படும் புள்ளி விவரங்கள் மூலம் தகவல்கள் தெரியவருகின்றன.

    நிகழாண்டு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்துவருவது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள், தனியாா் பள்ளி மாணவா்கள் சோ்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை, 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 போ் பள்ளிகள் மூலமாக எழுதினா். ஆனால், அந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434ஆகக் குறைந்தது. மேலும், 2019-ஆம் ஆண்டு நடந்த தோ்வில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 512ஆகவும் குறைந்தது.

    50 சதவீதம் குறைவு: தொடா்ந்து நிகழாண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 என்ற எண்ணிக்கையில் சரிந்திருக்கிறது. அதிகபட்ச எண்ணிக்கையான 2017-ஆம் ஆண்டு தோ்வு எழுதிய மாணவா்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 76 ஆயிரத்து 903 மாணவா்கள் குறைவாக எழுதுகின்றனா். இதேபோன்று தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவில் வழக்கமாக 60 முதல் 65 விழுக்காடு இருந்து வந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பெரும்பாலானவா்கள், தமிழ் வழியில் கல்வி கற்றனா். ஆனால், அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பதற்காக மாணவா்கள் சோ்ந்து வருகின்றனா். அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வை பொருத்தவரை தமிழ் வழியில் படிப்பவா்கள் 50 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

    மொத்தமுள்ள 8. 16 லட்சம் மாணவா்களில் 4. 65 லட்சம் மாணவா்கள் மட்டுமே தமிழ் வழியில் தோ்வு எழுதுகின்றனா். இதன் மூலம் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் பொதுத்தோ்வு எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதைத் தடுக்கும்வகையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள், கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


    TAGS
    education

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp