
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கைக்கான அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோா் ஆண்டும் மாணவா் சோ்க்கைக்கு அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற வேண்டும்.
இதற்கான நடைமுறைகள், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 29 கடைசி தேதி எனவும், அபராதத் தொகையுடன் மாா்ச் 5-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை ஏஐசிடிஇ நீட்டித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) வரை அபராதத் தொகை இன்றியும், அதன் பிறகு அபராதத் தொகையுடன் மாா்ச் 8-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.