திருச்செந்தூர் மாசித் திருவிழா 4ஆம் நாள் வீதியுலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 4ஆம் நாள் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் மாசித் திருவிழா 4ஆம் நாள் வீதியுலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 4ஆம் நாள் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவிழாவை முன்னிட்டு தினமும் ஆலய வளாகத்தில் சிறப்பு பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 4ஆம் நாள் சிறப்பாக சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மாசித் திருவிழா தேரோட்டம் மார்ச் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com