
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சார்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(மார்ச் 3) ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,014-க்கு விற்பனையாகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.48.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.48,500 ஆகவும் விற்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 4,014
1 சவரன் தங்கம் ..................... 32,112
1 கிராம் வெள்ளி .................. 48.50
1 கிலோ வெள்ளி ................. 48,500
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 4,005
1 சவரன் தங்கம் ..................... 32,040
1 கிராம் வெள்ளி .................. 48.60
1 கிலோ வெள்ளி ................. 48,600
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...