பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோனியம்மன் கோவில் தேரோட்டம்

கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றபடுகிறது.இந்த கோவிலில் செவ்வாய்,வெள்ளி மற்றும் சுப முகூர்த்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று.

பிரசித்தி பெற்ற கோணியம்மன் கோவிலின் தேரோட்டம் புதனன்று  நடைபெற்றது.இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி,ஒப்பணக்கார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சாட்டுடன் விழா தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு,திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தேரோட்ட நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.தேர் வந்த வழியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருபுறமும் நின்று பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com