கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

ஆந்திரா மற்றும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று தங்க கோப்பையை கைப்பற்றி இன்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரை
கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

ஆந்திரா மற்றும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து, ட்ரீம் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று தங்க கோப்பையை கைப்பற்றி இன்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர்.

ஆந்திரா மற்றும் நேபாள் மாநிலத்தில் நடந்த கால்பந்து மற்றும் ஸ்கேட்டிங் போட்டி  ஆந்திர மாநிலம் திருப்பதி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. 19 ஆம் நேஷனல் 7A சைடு ஃபுட்பால் சாம்பியன் ஷிப் விளையாட்டு போட்டியில் ராஜஸ்தான், மணிப்பூர் கர்நாடகா, அஸ்ஸாம் உத்தரகாண்ட், டெல்லி ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 17 வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் கோவையைச் சேர்ந்த லாரல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபிஷேக், முகமத்இர்பான்,இன்பசகாயராஜ், காரத்திக்ராஜா, இம்மானுவேல்,ஆகிய 5 பேர்கள் தங்க கோப்பையை வென்றனர். மேலும் நேபால் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்ட பிரிவில் கோவையைச் சேர்ந்த பெங்காலின் பப்ளிக் பள்ளி மாணவி சஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றார். 

மேலும் பேட்மிட்டன் போட்டியில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியின் பள்ளியின் நிர்வாகி அபிஷேக் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com