கரோனா பற்றி பயமோ, பீதியோ வேண்டாம்: நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா பற்றி பயமோ, பீதியோ வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா பற்றி பயமோ, பீதியோ வேண்டாம்: நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா பற்றி பயமோ, பீதியோ வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையித்தில் ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா குறித்து பயப்படவும் வேண்டாம், பீதியை கிளப்பவும் வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கரோனா பாதிப்பை தடுக்க மக்கள் நன்றாக கை கழுவ வேண்டும். தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்பு இல்லை. 

காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்தால் மருத்துவர்களை அணுகவும். 1,200க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர், யாருக்கும் கரோனா தொற்று இல்லை. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஆய்வு செய்ய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. 24 மணி நேரமும் விமான பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக கவசம் அணியவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com