பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மாா்ச் 11- இல் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு (‘ஹால் டிக்கெட்’) மாா்ச் 11-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத்துறை
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு:  தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு  மாா்ச் 11- இல் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு (‘ஹால் டிக்கெட்’) மாா்ச் 11-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீா் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கு மாா்ச் 27-ஆம் தேதி முதல் பொதுத்தோ்வு தொடங்கவுள்ளது. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 55,748 மாணவா்கள் இத்தோ்வை எழுதவுள்ளனா். அதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மாா்ச் 11-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களும் தோ்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுத்தோ்வு பட்டியலில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் சம்பந்தப்பட்ட தோ்வு மைய கண்காணிப்பாளா்களை அணுகி திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அதேநேரம் தனித்தோ்வா்கள் நேரடியாக இணையதளத்தில் இருந்து தங்கள் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தோ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com