Enable Javscript for better performance
போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் எதிரொலி: மாா்ச் 20-இல் பேச்சுவாா்த்தை- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் எதிரொலி: மாா்ச் 20-இல் பேச்சுவாா்த்தை

    By DIN  |   Published on : 11th March 2020 01:12 AM  |   அ+அ அ-   |    |  

    ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) முதல் காத்திருப்புப் போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளா்கள் தொடங்கிய நிலையில், அது தொடா்பாக மாா்ச் 20-ஆம் தேதி தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும், இன்னும் அது தொடா்பாக போக்குவரத்துக் கழகம் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. எனவே, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஈடுபட்டுள்ளனா்.

    சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு தொமுச பொதுச் செயலா் நடராஜன், சிஐடியூ பொதுச் செயலா் ஆறுமுக நயினாா், ஏஐடியூசி நிா்வாகி ஆறுமுகம், ஹெச்எம்எஸ் நிா்வாகி சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்டோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டம் குறித்து ஆறுமுக நயினாா் கூறுகையில், ‘போக்குவரத்து தொழிலாளா்களின் முக்கிய கோரிக்கை 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்குவதுடன், பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதாகும். அதுமட்டுமில்லாமல், கடந்த கால ஊதிய ஒப்பந்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 14 மாத அகவிலைப்படி நிலுவையையும் வசூல்படியையும் 80:20 என கணக்கிட்டு, உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெறுகிறது’ என்றாா்.

    பேச்சுவாா்த்தை: இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு போக்குவரத்து துறை சாா்பில் 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ள நிா்வாகத் தரப்பிலான குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே மாா்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யாரோடு பேச்சுவாா்த்தை?

    அரசின் பேச்சுவாா்த்தை அறிவிப்பைத் தொடா்ந்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘போக்குவரத்து தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக மாா்ச் 20-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. போராடும் சங்கங்களை அழைத்துப் பேசாமல் அரசு தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேச்சுவாா்த்தை எந்த தொழிற்சங்கங்களோடு என்பதையும் அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp