வேதாரண்யம் பகுதியில் 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சுருக்கு மடி வலை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் நடுக்கடலில் மீனர்களுக்குள் நேர்ந்த மோதல் சம்பத்தைக் கண்டித்து ......
மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீனவர்கள் வேலை நிறுத்தம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சுருக்கு மடி வலை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் நடுக்கடலில் மீனர்களுக்குள் நேர்ந்த மோதல் சம்பத்தைக் கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

வேதாரண்யம்,கோடியக்கரை கடல் பரப்பில் மீன்வளத்தைப் பாதிக்கச்செய்யும் தடைவித்தப்பட்டுள்ள சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் வட்டாரத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்துக்கு அப்பால் 3 கடல் மைல் தொலைவில் நாகை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர்.விசைப்படகில் சென்ற இவர்கள் தடைசெய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தனராம்.

இதனையறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் சிலர் படகு ஒன்றில் கடலுக்குள் சென்று,கீச்சாங்கும்பம் மீனவர்களிடம் எதிர்பை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் வெள்ளப்பள்ளம் மீனவர்களான நா.பிரசாந்த்(19),செ.ஆனந்தவேலு(18), சு.விக்னேஷ்(21),து.விஜய்(25),செ.முத்துவேல்(41),கீச்சாங்குப்பம் கிராமம் ப.அஜீத்(25) ஆகிய 7 பேர் கையமடைந்து நாகை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, அன்று இரவு வெள்ளப்பள்ளம் பிரதான சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர் வேலை நிறுத்தம்:

இந்த நிலையில்,வேதாரண்யம் பகுதிக்குட்பட்ட 10 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில்,பிரச்னைக்கு உரியதீர்வு கிடைக்கும் வரை கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும், சுருக்கு மடி வலை பயன்பாட்டைத் தடுக்கவும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள்,நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com