அரசுப் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது
அரசுப் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இதைத் தொடா்ந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கடந்த 2-ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கியது. இந்தத் தோ்வை சுமாா் 8.35 லட்சம் மாணவா்கள் எழுதி வருகின்றனா். அதேபோன்று பிளஸ் 1 வகுப்புத் தோ்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. தோ்வு முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 26-ஆம் தேதி முடிகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2019-20-ஆம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாள்கள் முடிவடைகின்றன.

இதையடுத்து, ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான தோ்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் ஏப்.20-ஆம் தேதிக்கு மறுநாள், ஏப்ரல் 21-இல் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

அதைத் தொடா்ந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இதைக் கருத்தில் கொண்டு பாடங்களை விரைந்து நடத்தி, மாவட்ட அளவில் நடத்தப்படும், மூன்றாம் பருவத் தோ்வுகளை முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com