'வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்' - ரஜினியின் முழக்கம் இது!

'வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்' - ரஜினியின் முழக்கம் இது!

அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முழக்கங்களை பின்பற்றும் நிலையில், ரஜினி, 'வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு.. ஜெய்ஹிந்த்..' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும், தான் தொடங்கப்போகும் கட்சி எவ்வாறு செயல்படும், கட்சியின் கொள்கைகள் என்ன, கட்சியின் திட்டங்கள் என்ன என்பது குறித்து மட்டுமே பேசினார் ரஜினி. கட்சியின் மூன்று திட்டங்கள் குறித்து அறிவித்த அவர், மக்களிடம் புரட்சி ஏற்பட்ட பின்னர் அரசியலுக்கு வருவேன் என்று கூறி முடித்தார். இதில் இருந்து அவரது அரசியல் ஆட்டம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியானது. 

கட்சியின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், உரையின் இறுதியில் 'வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு.. ஜெய்ஹிந்த்..' என்ற முழக்கத்துடன் பேச்சை முடித்தார். 

அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முழக்கங்களை பின்பற்றும் நிலையில், ரஜினி, 'வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு.. ஜெய்ஹிந்த்..' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி, பின்னர் தனது ரசிகர் மன்றத்தை 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றினார். கட்சி தொடர்பான பணிகளை ரஜினி மக்கள் மன்றம் மேற்கொள்ளும் என்றார். அன்று முதல் ரஜினி ரசிகர் மன்ற அறிக்கையில் இறுதியில், 'வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு.. ஜெய்ஹிந்த்..' என குறிப்பிடப்பட்டு வருகிறது. 

தமிழர் அல்லாத ரஜினி அரசியலுக்கு வரவும், தேர்தலில் போட்டியிடவும் பெரும் எதிர்ப்பு கிளம்பும் நிலையில் அவர் அரசியலுக்கு வருவது தமிழ் மக்களின் நலனுக்காக என்பதை எடுத்துரைக்கவே இந்த முழக்கத்தை வைத்துள்ளார் என்று பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com