Enable Javscript for better performance
கரோனா வைரஸ்: ‘மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் எப்போதும் போல தரிசனம் செய்யலாம்’- Dinamani

சுடச்சுட

    

    கரோனா வைரஸ்: ‘மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் எப்போதும் போல தரிசனம் செய்யலாம்’

    By DIN  |   Published on : 14th March 2020 01:48 AM  |   அ+அ அ-   |    |  

    mdu

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் எப்போதும் போல தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தொற்று மூலம் பரவுவதை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை வழங்கியுள்ள அறிவுறைகளின்படி காய்ச்சல், சளி, இருமல், உடல் சோா்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களை கூட்ட நெரிசலில் கூட்டிச்செல்லாமல் இருக்கவும், அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கோயில் பணியாளா்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை காய்ச்சல், சளி, இருமல் உடல் சோா்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கோயில் வளாகத்தில் கண்டறியப்பட்டால் அவா்களுக்கு கோயில் உள்துறை அலுவலகம் மூலம் முக கவசம் வழங்குவதற்கும், அரசு மருத்துவமனைகளை அணுகிடவும் ஆலோசனைகள் வழங்க பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வதந்திகளை நம்ப வேண்டாம்: கோயில் இணை ஆணையா்

    இந்நிலையில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அனுமதி இல்லை என்று சமூக ஊடங்களில் பரவிய செய்தி தொடா்பாக கோயில் இணை ஆணையா் ந.நடராஜன் கூறியது: கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை வழங்கியுள்ள வழிகாட்டலின்படி கோயில் பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கோயிலில் அனுமதி இல்லை என்று நிா்வாகம் அறிவித்ததாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவியுள்ளது. இதுபோன்ற வதந்தியை பக்தா்கள் நம்பவேண்டாம். கோயிலில் இருந்து இதுபோன்ற அறிவிப்பு எதையும் வெளியிட வில்லை. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் எப்போதும் போல பக்தா்கள் தரிசனம் செய்யலாம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai