Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.1,152 குறைவு: ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.32,104- Dinamani

சுடச்சுட

    

    தங்கம் பவுனுக்கு ரூ.1,152 குறைவு: ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.32,104

    By DIN  |   Published on : 14th March 2020 12:13 AM  |   அ+அ அ-   |  

    gold

    சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,152 குறைந்து , ரூ.32,104-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது.

    இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,152 குறைந்து ரூ.32,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.144 குறைந்து, ரூ.4,013-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.90 குறைந்து, ரூ.46 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,900 குறைந்து ரூ.46,000 ஆகவும் இருந்தது.

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 4,013

    1 பவுன் தங்கம் ..................... 32,104

    1 கிராம் வெள்ளி .................. 46.00

    1 கிலோ வெள்ளி ................. 46,000

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 4,157

    1 பவுன் தங்கம் ..................... 33,256

    1 கிராம் வெள்ளி .................. 48.90

    1 கிலோ வெள்ளி ................. 48,900

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai