
பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி அடுத்துள்ள மைக்கேல்பட்டியைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது மகன் விக்னேஷ் (24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த நடராஜ் என்பவரது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஷ், அவரை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் பலாத்காரம் செய்தாக கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து நடராஜ் தரப்பில் அளித்த புகாரின்பேரில், விக்னேஷ் மற்றும் அவரது பெரியம்மா த.பாப்பாத்தி (49) ஆகியோா் மீது திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் விக்னேஷூக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி புருஷோத்தமன் தீா்ப்பு வழங்கினாா்.
மேலும், விக்னேஷூக்கு உடைந்தையாக செயல்பட்ட அவரது பெரியம்மா பாப்பாத்திக்கு ரூ.1000 அபராதம் விதித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...