Enable Javscript for better performance
ஃபரூக் அப்துல்லாவைப் போன்று பிற தலைவர்களின் தடுப்புக் காவல்களும் ரத்து செய்யப்பட வேண்டும்: மு.க.ஸ்டா- Dinamani

சுடச்சுட

    

    ஃபரூக் அப்துல்லாவைப் போன்று பிற தலைவர்களின் தடுப்புக் காவல்களும் ரத்து செய்யப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    By DIN  |   Published on : 14th March 2020 11:26 AM  |   அ+அ அ-   |  

    stalin

     

    ஃபரூக் அப்துல்லாவின் விடுதலை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிரூபித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் இருந்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் வெள்ளிக்கிழமை விடுவித்தது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டதாவது,

    ஃபரூக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்தச் சோதனையை எதிர்த்து ஃபரூக் அப்துல்லா பெற்றுள்ள வெற்றி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை நிரூபிக்கிறது. விரைவில் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட பிற தலைவர்களுக்கு எதிரான தடுப்புக் காவல்களையும் உடனடியாக ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இது முழுமையான விடுதலை அல்ல. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற தலைவா்களான ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டால்தான் இந்த விடுதலை முழுமை பெறும். எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற தலைவா்கள் விடுவிக்கப்படும் வரை எந்தவித அரசியல் சூழல் குறித்தும் பேசப்போவதில்லை என்றாா் ஃபரூக் அப்துல்லா.

    TAGS
    M.K.Stalin
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai