கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் சனிக்கிழமை காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 
கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் சனிக்கிழமை காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதுவரை 180 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து மின் உற்பத்தி சனிக்கிழமை காலை 8:30 மணி அளவில் மீண்டும் தொடங்கியது. இதுவரையிலும் 180 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது அணு உலையில் தற்போது மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com