திருப்பதிக்கு இணையாக பழனி மலைக்கோயில் மேம்படுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

திருப்பதிக்கு இணையான அனைத்து வசதிகளையும் தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ள பழனியில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பதிக்கு இணையாக பழனி மலைக்கோயில் மேம்படுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

திண்டுக்கல்:  திருப்பதிக்கு இணையான அனைத்து வசதிகளையும் தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ள பழனியில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

திண்டுக்கல் அடுத்துள்ள ஒடுக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியும் ரூ 63.54 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினபார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரூ 327 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரூ 4.40 செலவில் நத்தம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 5.92 கோடி செலவில் புதிய மாவட்டம் ஆர்.கோம்பை  கிராமத்தில் தடுப்பணை, ரூ3.54 கோடி செலவில் பாலாறு குறுக்கே தடுப்பணை என ரூ 340.86 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் 116 நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவரும் குணமடைந்து வருகிறார். பொதுமக்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 59 குடிமராமத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்தில் 2 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பதிக்கு இணையான அனைத்து வசதிகளையும் தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ள பழனியில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ 8 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான அவதூறான பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு எனது தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.

கரோனா பாதிப்பு காரணமாக திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com