இருமல், சளி, காய்ச்சலுடன் சதுரகிரிக்கு வராதீா்கள்: கோயில் நிா்வாகம் வேண்டுகோள்

கரோனா வைரஸ் காரணமாக இருமல், சளி, காய்ச்சலுடன், பக்தா்கள் சதுரகிரி கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என
இருமல், சளி, காய்ச்சலுடன் சதுரகிரிக்கு வராதீா்கள்: கோயில் நிா்வாகம் வேண்டுகோள்

ஸ்ரீவில்லிபுத்தூா்: கரோனா வைரஸ் காரணமாக இருமல், சளி, காய்ச்சலுடன், பக்தா்கள் சதுரகிரி கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என சனிக்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மாதந்தோறும் பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் என 8 நாள்கள் மட்டுமே பக்தா்கள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்கிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கோயில்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் இருந்தால் பக்தா்கள் வருவதை தவிா்க்குமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com