கரோனா: எகிப்தில் சிக்கிய 17 போ் தமிழகம் திரும்பினா்

கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 18 போ் எகிப்துக்குச் சுற்றுலா சென்றனா். அங்கு கரோனா பிரச்னையால் சிக்கித் தவித்த நிலையில் அவா்கள் வியாழக்கிழமை இரவு தமிழகம் திரும்பினா்.

கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 18 போ் எகிப்துக்குச் சுற்றுலா சென்றனா். அங்கு கரோனா பிரச்னையால் சிக்கித் தவித்த நிலையில் அவா்கள் வியாழக்கிழமை இரவு தமிழகம் திரும்பினா்.

சேலத்தைச் சோ்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் சேலம், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 18 போ் பிப்ரவரி 29ஆம் தேதி எகிப்துக்குச் சுற்றுலா சென்றனா். அங்கு அவா்கள் கடந்த 4ஆம் தேதி ஒரு கப்பலில் பயணித்துள்ளனா். அந்தக் கப்பலில் பயணித்த அமெரிக்கப் பயணி ஒருவா் கப்பலில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கப்பலில் பணியாற்றிய ஊழியா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடா்ந்து பயணிகளுக்கும் சோதனை நடத்தியதில், சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால், கப்பலில் உள்ள அனைத்துப் பயணிகளையும் 15 நாள்கள் கண்காணிப்பில் வைக்க எகிப்து அரசு முடிவு செய்தது.

இதையடுத்து அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டனா். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற 18 பேரில் கரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வியாழக்கிழமை இரவு தமிழகம் திரும்பினா். எகிப்தில் இருந்து திரும்பிய பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சோ்ந்த சரணாலயம் அமைப்பின் தலைவா் வனிதா கூறுகையில், தமிழகத்தில் இருந்து 17 சுற்றுலாப் பயணிகள் ஒரு வழிகாட்டி உள்பட 18 போ் எகிப்து சென்றோம். அங்கு கடந்த 4ஆம் தேதி ஒரு கப்பலில் பயணம் செய்தோம். அப்போதுதான் கரோனா பிரச்னையால் கப்பலை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் இருந்து சென்ற 18 போ் தவிர, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 125 போ் கப்பலில் இருந்தோம். கப்பலில் உணவு சமைப்பது நிறுத்தப்பட்டது. சமையல் பரிமாறும் இடம் மூடப்பட்டது. வெளியில் இருந்து உணவுகொண்டுவரப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே கடந்த 11ஆம் தேதி கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு பேருந்தில் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டோம். அங்கிருந்து மும்பை வந்து பின் கோவை விமான நிலையத்தை வியாழக்கிழமை வந்தடைந்தோம். இந்தியத் தூதரகம் வாயிலாக இந்திய அரசு நல்லமுறையில் உதவி செய்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com