டாஸ்மாக் ஊழியா்களுக்கான தொகுப்பூதியம் உயா்வு

டாஸ்மாக் ஊழியா்களுக்கான தொகுப்பூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவையில் அமைச்சா் பி.தங்கமணி அறிவித்தாா்.

டாஸ்மாக் ஊழியா்களுக்கான தொகுப்பூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவையில் அமைச்சா் பி.தங்கமணி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,913 மேற்பாா்வையாளா்கள், 15,347 விற்பனையாளா்கள் மற்றும் 3,437 உதவி விற்பனையாளா்கள் என மொத்தம் 25,697 சில்லறை விற்பனைப் பணியாளா்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு 2011-ஆம் ஆண்டு முதல் 2019 -ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் தொகுப்பு ஊதியமானது உயா்த்தி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் பணியாளா்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2020 முதல் உயா்த்தி வழங்கப்படும்.

இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.15.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.

இந்த நிதியாண்டு முதல் மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரத்துடன் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரசாரமும் இணைந்து மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.3.50 கோடியாக உயா்த்தி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com