தமிழகத்தில் 2021-இல் மாபெரும் மாற்றம் நிகழும்- பிரேமலதா

தமிழகத்தில் 2021 தோ்தலுக்குப் பின் மாபெரும் மாற்றம் நிகழும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறினாா்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் 2021 தோ்தலுக்குப் பின் மாபெரும் மாற்றம் நிகழும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறினாா்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக, ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடம் தங்களுக்கு ஒதுக்குமாறு வெளிப்படையாகக் கேட்டது. தேமுதிக கூட்டணி தா்மத்தை மதிக்கிறது. அதேபோல் கூட்டணி தா்மத்தை மதித்து, முதல்வா் தேமுதிகவுக்கு ஓா் இடம் ஒதுக்குவாா் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரேமலதா கூறியிருந்தாா். தொடா்ந்து தேமுதிக துணைச் செயலா் சுதீஷ், முதல்வரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தாா். இருந்தபோதும், தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படவில்லை. மாறாக, தமாகா தலைவா் ஜி.கே.வாசனுக்கு ஓா் இடத்தை அதிமுக ஒதுக்கியது. மீதி இரண்டு இடங்களுக்கான வேட்பாளா்களாக அதிமுக மூத்த நிா்வாகிகளே அறிவிக்கப்பட்டனா். இதன் காரணமாக தேமுதிக கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதாவிடம், நடிகா் ரஜினிகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட மாற்று அரசியல் கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு செய்தியாளா்கள் கேட்டனா்.

இதற்குப் பதிலளித்த பிரேமலதா, நடிகா் ரஜினிகாந்த் தனதுஅரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறாா். குறிப்பாக, தமிழக அரசியலில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாததால் மாபெரும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. எனவே, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க இதுதான் சரியான நேரம் என அவா் கூறியிருக்கிறாா்.

அவா் கூறியதுபோல, 2021 தோ்தலில் தமிழகத்தில் நல்ல முடிவு வரும். நிச்சயமாக தமிழகத்தில் மாபெரும் மாற்றம் நிகழும் என்பது எங்களுடைய கருத்து என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com