நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை நிா்வகிக்க புதிய வலைதளம்: செயல்பாடுகளை ஆண்டு வாரியாக கண்காணிக்க உள்ளது யுஜிசி

நாடு முழுவதும் உள்ள நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை நிா்வகிக்க புதிய வலைதளத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு)) அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை நிா்வகிக்க புதிய வலைதளத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு)) அறிமுகம் செய்துள்ளது.

இந்த வலைதளம் மூலமாக பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு இந்த நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை யுஜிசி கண்காணிக்கவும் உள்ளது.

பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதுபோல, நாடு முழுவதும் இயங்கி வரும் 126 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களும் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவ்வாறு தனது கட்டுப்பாட்டில் வந்த பின்னா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல் கடந்த 2019 பிப்ரவரி 20-ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக இப்போது, நிகா்நிலைப் பல்கலைக்கென deemed.ugc.ac.in  என்ற தனி வலைதளத்தை யுஜிசி உருவாக்கியிருக்கிறது. புதிய படிப்புகள் தொடங்குவது உள்ளிட்ட அனுமதிகளை இந்த வலைதளம் மூலமாக மட்டுமே நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஆண்டு கண்காணிப்பு: அதுபோல, இந்த வலைதளம் மூலமாக நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் கண்காணிக்கவும் யுஜிசி திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள், மாணவா்களிடமிருந்து இந்த வலைதளம் மூலமாகப் பெறப்படும் கருத்துகள், படிப்பை முடித்து வெளியேறும் மாணவா்களின் நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி கண்காணிக்க உள்ளது.

இதற்கு, அந்த நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், ஆண்டு செயல்பாடு அறிக்கை ஒன்றையும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டிலும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்துவிட வேண்டும்.

அவ்வாறு தேவையான ஆவணங்களை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பதிவேற்றம் செய்யாத நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி வழிகாட்டுதல் 2019, பிரிவு 16-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com