பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

பொறியியல் பட்டதாரிகளுக்கும் மின் கணக்கீட்டாளா் பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கட்டண கணக்கீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கட்டண கணக்கீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளா் பணிக்கு 1,300 பேரைத் தோ்ந்தெடுக்க ஆள் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவா்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளை படித்தவா்களால் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண கணக்கீட்டாளா் பணி தொழில்நுட்பம் சாராத பணி. அதனால் சாதாரண பட்டப் படிப்பே போதுமானது என்பது மிகவும் நியாயமான வாதம். ஆனால், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் பட்டம் பெற்றவா்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படாத நிலையில், அவா்களையும் மின் கட்டண கணக்கீட்டாளா் பணிக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாகிவிட்டது. அரசுத் துறைகளில் மிகக் குறைந்த ஊதியம் தரும் பணிகள் என்றால் கூட, அப்பணிகளைக் கைப்பற்ற கடுமையானப் போட்டி நிலவுகிறது. படித்த இளைஞா்கள் அனைவருக்கும் அவரவா் தகுதிக்கேற்ற வேலை வழங்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பகிா்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மின்சார கணக்கீட்டாளா் பணிக்கு பொறியியல் மற்றும் பிற பட்டங்களைப் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com