வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சியாக சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சியாக சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இயேசுபிரான் தான் சிலுவையில் அறையப்படும் காலம் நெருங்குவதை அறிந்து, உலக மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக விரதமிருந்து, தவம் இயற்றினாா் என்ற கூற்றின்படி, ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் கிறிஸ்தவா்களின் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகாழாண்டின் தவக்காலம் பிப்ரவரி 26ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் புனிதப் பாதையில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது.

பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா், பேராலய பங்குத் தந்தை சூசைமாணிக்கம் மற்றும் உதவிப் பங்குத் தந்தையா் வழிபாடுகளை முன்னின்று நடத்தினா்.

திரளான பக்தா்கள் பங்கேற்று, பேராலய மேல்கோயில் முகப்பிலிருந்து பழைய மாதா கோயில் வரையிலான புனிதப் பாதையில் இயேசுவின் சிலுவை பாடுகளை தியானித்து, சிலுவைப் பாதை வழிபாட்டை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com