ஆரம்பாக்கம் மாதா கோயில் 108ஆம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலம்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலின் 108ஆம் ஆண்டு தேர் திருவிழா சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. 
ஆரம்பாக்கம் மாதா கோயில் 108ஆம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலம்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலின் 108ஆம் ஆண்டு தேர் திருவிழா சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வானதூதர்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மாதா கோயில் தேர் திருவிழாவை காண தமிழத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவார்கள்.

இந்நிலையில், இந்த மாதா கோயிலின் 108ஆம் ஆண்டு தேர் திருவிழாவை ஒட்டி மார்ச் 6 -ஆம் தேதி  கொடியேற்ற விழா ஆரம்பாக்கம் மாதா கோயில் பாதிரியார் பாப்பையா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.ஏ. புரம் பாதிரியார் போஸ்கோ கொடியேற்ற நிகழ்வை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து சனிக்கிழமை தம்பதியர்  தின சிறப்பு வழிபாட்டை பெரியபாளையம் மறை மாவட்ட முதன்மை குரு பாதிரியார் டி.அருள்ராஜ் நடத்தினார். ஞாயிறன்று குழந்தைகள் தின சிறப்பு வழிபாட்டை செங்கல்பட்டு மறைமாவட்ட பாதிரியார் ஜேக்கப் அலெக்ஸ் நடத்தினார்.

அதேபோன்று, திங்களன்று இறையழைத்தல் தின வழிபாட்டை பழவேற்காடு பாதிரியார் கபிரியேல் நடத்தினார்.

செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தின வழிபாட்டை லட்சுமிபுரம் பாதிரியார் பெலிக்ஸ் பிலிப் நடத்தினார். புதன்கிழமை முதியோர் தின வழிபாட்டை ஆவடி எச்.வி.எப் பாதிரியார் ரேய்மண்ட் நடத்தினார். வியாழக்கிழமை இளையோர் தின வழிபாட்டை சென்னை மயிலை மறைமாவட்ட வேந்தர் பாதிரியார் வர்கீஸ் ரோசாரியோ நடத்தினார். வெள்ளிக்கிழமை நற்கருணை தின வழிபாட்டை எருக்கஞ்சேரி பாதிரியார் பெஞ்சமின் சூசை நடத்தினார்.

தொடர்ந்து தேர் திருவிழா தினமான மார்ச்-14 சனிக்கிழமை பெசன்ட் நகர் பங்குதந்தை பேராயர் வின்சென்ட் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டு வழிபாட்டில் திருவொற்றியூர் பாதிரியார் ராக் சின்னப்பா, பூவை குருமட நிர்வாகி பாதிரியார் அருளானந்த பேட்ரிக், வரதயப்பாளைம் பாதிரியார் பென்னி லாரன்ஸ், கும்மிடிப்பூண்டி பாதிரியார்கள் திவாகர், பிரிதிவிராஜ், தடா பாதிரியார் மேத்யூ, சூளூர்பேட்டை பாதிரியார் விக்டர்ஜான் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா உள்ளிட்டோரின் திருச்சிலைகள் ஆரம்பாக்கம் பகுதி முழுக்க பக்தர்கள் திருப்பாடல்களை பாடியபடி திருவீதி உலா வந்தனர்.

இறுதியாக ஞாயிறன்று கொடியிறக்க வழிபாட்டை பாதிரியார்கள் வரதையப்பாளையம் பென்னி லாரன்ஸ், கும்மிடிப்பூண்டி திவாகர், கவரப்பேட்டை அன்பு இல்லம் ஜோ பிரபு, பூவை குருமடம் அருளானந்த பேட்ரிக் நடத்தினர்.

இந்த தேர் திருவிழாவில் எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார்,  கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு,   ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரம்பாக்கம் வருகை தந்து மாதா அருள் பெற்றனர். 

திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் 200 போலீஸார் ஈடுபட்டனர்.
 
தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் மாதா கோயில் பாதிரியார் பாப்பையா, தூய அன்னாள் அருட் சகோதரிகள், திருவிழா குழுவினர், பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com