கோடியக்கரை சரணாலயம்: கஜாவுக்குப் பிறகு மெல்ல ஆறுதல் தரும் விலங்குகள் வளர்ச்சி  

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிநிறைவடைந்த
கோடியக்கரை சரணாலயம்: கஜாவுக்குப் பிறகு மெல்ல ஆறுதல் தரும் விலங்குகள் வளர்ச்சி  

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், கஜா புயலுக்கு பிறகு விலங்குகளின் இனப் பெருக்க வளர்ச்சியில் சற்று அதிகரித்து காணப்படும் எண்ணிக்கை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அதே நேரம் பழம் தின்னி வெளவால்களின் நிலை சமூக ஆர்வலர்களை கவலையளிப்பதாக அமைந்துள்ளன.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமை மாறா காடுகள் சார்ந்த பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக உள்ளது.

இங்கு அரிய வகை இனமான வெளிமான் மற்றும் புள்ளிமான், மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட காட்டு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த சரணாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விலங்குகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். நிகழாண்டு கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், எண்ணிக்கை விபரங்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

இதில் கஜா பாதிப்புக்கு பிறகு 2018- 19 -ல் 681 ஆக இருந்த வெளிமான் இனத்தின் எண்ணிக்கையில் சீராகன முன்னேற்ற உள்ளது. கடந்த ஆண்டில் 54 என்ற எண்ணிக்கையில் இருந்த புள்ளிமான்களுடன் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புதிய வரவாக அமைந்த 43 மான்களுடன் மொத்தம் 122 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 47 ஆக இருந்த குதிரைகள் 197 ஆக உயர்ந்துள்ளன. இதேபோல காட்டுப் பன்றி, நரி, குரங்கு, கீரி, முயல் போன்ற இனங்கள் கஜாவுக்கு பிறகு சற்று முன்னேற்றமுள்ளது. கடந்த கணக்கெடுப்பில் காணப்படாத புனுகு பூனை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 2014-1-ல் 1,527 ஆக இருந்த பழந்தின்னி வெளவால்கள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜா புயலுக்குபிறகு பெரிய அளவில் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் இனப் பெருக்க வளர்ச்சியில் மெல்ல முன்னேற்றம் தெரிவந்திருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com