தங்கம் வாங்க இன்று நல்ல நாள்: ஒரே நாளில் ரூ.984 அதிரடியாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  செவ்வாய்க்கிழமையான இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கம் வாங்க இன்று நல்ல நாள்: ஒரே நாளில் ரூ.984 அதிரடியாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  செவ்வாய்க்கிழமையான இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் தங்கம் விலை தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(மார்ச் 17) 22 கிராம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.123 குறைந்து, ரூ.3,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.38.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ1,900 குறைந்து ரூ.39,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,820

1 சவரன் தங்கம் ..................... 30,560

1 கிராம் வெள்ளி .................. 38.10

1 கிலோ வெள்ளி ................. 38,100

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,943

1 சவரன் தங்கம் ..................... 31,544

1 கிராம் வெள்ளி .................. 40.80

1 கிலோ வெள்ளி ................. 40,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com