கரோனா நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீட்டு வசதியை அளிக்குமாறு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீட்டு வசதியை அளிக்குமாறு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 15 0 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீட்டு வசதியை அளிக்குமாறு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியும், அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்குமாறு அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com