Enable Javscript for better performance
bannari amman gundam festival postponed ! பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 18th March 2020 05:28 PM  |   அ+அ அ-   |    |  

    bannari amman gundam festval

    பண்ணாரி மாரியம்மன் கோயில்

     

    சத்தியமங்கலம்: வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் இன்று அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் உலக நாடுகளில் கரோனோ வைரஸ் தாக்கம் மற்றும் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அந்தவகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு வரும் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன்,  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சபர்மதி, கோபி  வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேஷ், பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai